தேர்தல்களுக்கு தமிழரசுக்கட்சி தயார்: சாணக்கியன் திட்டவட்டம்
எந்த தேர்தலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - செட்டிபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி அவர் விரும்பிய அனைத்து சட்டமூலங்களையும் மொட்டு கட்சியினரை வைத்து செயற்படுத்தி கொள்கின்றார்.
முதலில் நடைபெறவிருக்கும் தேர்தல்
இந்த வகையில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு விடயத்திலும் அரசியலமைப்பில் செய்ய வேண்டிய திருத்தங்களையும் அவர் கடந்த காலங்களில் செய்திருக்கலாம்.
அவை ஒன்றையும் செய்யாமல் மீண்டும் ஜனாதிபதியாக வந்து இரண்டு வருடத்தில் தீர்வுகளை பெற்றுத்தருவதாக கூறுவதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்படுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடாத்தப்படுமா என்பது ஜனாதிபதிக்கு மட்டுமே தெரியும்.
எந்த தேர்தல் முதலில் நடைபெற்றாலும் அதை எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam