கனடா தடை செய்த மகிந்த - கோட்டாபயவை சந்தித்த புலம்பெயர் அமைப்புக்களால் சிக்கல்
கனடா தடை செய்த மகிந்த மற்றும் கோட்டாபயவை சந்தித்த புலம்பெயர் அமைப்புக்களால் சிக்கல் காணப்படுவதாக கனேடிய தமிழர் தேசிய அவையின் ஊடகப்பேச்சாளர் தேவ சபாபதி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும், சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற ஈழத்தமிழர் கூட்டத்தில் இலங்கையை சேர்ந்த அமைப்புக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவிற்கும், கோட்டாபய ராஜபக்சவிற்கும் கனேடிய அரசு தடை விதித்திருந்த நிலையில், மீண்டும் அவர்களை நல்லவர்களாக வெளிப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே புலம்பெயர் அமைப்புகளின் குழு அண்மையில் மகிந்த ராஜபக்சவை சந்தித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |