சுமந்திரன் விரைவாக வெளியேறலாம்! ஆதங்கப்படும் தொண்டன்
சுமந்திரன் இன்னும் நான்கு ஆண்டுகளில் தமிழரசுக் கட்சியை விட்டு விலகிச் சென்றுவிடுவார் இதனால் சட்ட நுணுக்கம் தெரிந்த இளையோருக்கு கட்சி வாய்ப்பளிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக சம்பந்தனை ஓய்வு பெற வேண்டும் என கோரிய சுமந்திரன் இன்று குகதாசனை செயலாளர் பதவிக்கு முன்மொழிந்துள்ளமை முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், குழப்பநிலை காரணமாக தமிழரசுக்கட்சியின் அங்கத்தவர் தெரிவு இடைநிறுத்தப்பட்டது 100% சரியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் செயலாளர் போட்டியில் இருந்து விலகியமைக்கு காரணம் தற்போதைய தலைவர் சிறீதரன் பதவியை விட்டுக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டமையே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
