அமெரிக்காவில் திறந்து வைக்கப்பட்ட மிக உயரமான அம்பேத்கர் சிலை
அமெரிக்காவில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் அம்பேத்கர் சர்வதேச மையத்தினால் கட்டப்பட்டு வந்த 'சமத்துவத்தின் சிலை' என்று பெயரிடப்பட்ட அம்பேத்கரின் முழுஉருவ சிலையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்டவர்கள் அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலை வடிவமைப்பு
குறித்த சிலையை பிரபல சிற்பி ராம் சுதார் வடிவமைத்துள்ளார்.
இவர் குஜராத் நர்மதா ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள 'ஒற்றுமையின் சிலை' என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri
