பேச்சுவார்த்தைகளால் மாத்திரம் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது: ரவி கருணாநாயக்க(Video)
இலங்கையில் இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை மாற்றவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“பேச்சுவார்த்தைகளின் மூலம் மாத்திரம் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. மாறாக பேச்சுவார்த்தைகள் செயல் முறைப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் 2015ல் ஏற்பட்டிருந்த பொருளாதார பிரச்சினைகளை நாம் தீர்த்தோம். மக்கள் வரிசைகளை இல்லாது செய்தோம். எனினும் தற்போது மீண்டும் அனைத்திற்கும் மக்கள் வரிசையில் நிற்கும் யுகம் உருவாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு பின் இவை குறைக்கப்பட்டு வருகின்றன. வரிசை யுகத்தை முற்றாக இல்லாமல் செய்ய அவரால் மாத்திரமே முடியும். மேலும், விழுந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு என்னால் செய்ய முடியுமானவற்றை நான் ஒரு தனிநபராக செய்வேன்”என கூறியுள்ளார்.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri