தந்தையாக என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது - ரிஷி சுனக் உருக்கம்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டுள்ளமைக்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனது டுவிட்டரில் உருக்கமான கருத்தினையும் வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள தலீபான் அமைப்பினர், பெண்களுக்கான சுதந்திரத்தை பறித்து வருகின்றனர்.இந்த முடிவு மாணவிகளை கண்ணீரில் தள்ளியுள்ளது.
தலிபான்களின் அட்டூழியம்
இரு மகள்களுக்கு தந்தை என்ற நிலையில், பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகின்ற ஒரு உலகத்தை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு அனுமதி மறுப்பது என்பது மிகக்கொடிய பின்னடைவு ஆகும். இதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கின்றது.
தலிபான்களை, அவர்களின் செயல்களின் அடிப்படையில் நாம் தீர்மானிப்போம் என்றும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கிருஷ்ணா, அனுஷ்கா என 2 மகள்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.