விடுதலைப்புலிகளுடன் தமக்கு தொடர்பா? தலிபான்கள் தெரிவித்துள்ள விடயம்
தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ, அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தலிபான்கள் வலியுறுத்துகின்றனர்.
கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள, தலிபான் பேச்சாளர் சுஹைல் ஷாஹீன், தலிபான் ஒரு சுதந்திர விடுதலைப் படை என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் புலிகளுடன் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. தாங்கள் ஒரு சுயாதீன விடுதலைப் படை.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக, வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியதாக ஷாஹீன் கூறியுள்ளார்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி நேற்று தலைநகர் காபூலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் அமைதியான அதிகார பரிமாற்றத்திற்காக பேச்சுவார்த்தையை தமது அமைப்பு நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் பாமியன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான புத்தர் சிலை, தலிபான்களால் 2001 மார்ச்சில் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது, அங்குள்ள பௌத்த தளங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து இருக்காது என்று ஷாஹீன் வலியுறுத்தியுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
