பெண்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்! தாலிபான்களின் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் மார்ச் 21 முதல் அனைத்து மாணவிகளும் பாடசாலைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியது முதல் பெண்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.
அதன்படி பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, வெளியே தனியாக நடமாடக்கூடாது போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதே போன்று தனியார், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை.
பாடசாலைகள், கல்லூரிகள், மதராசாக்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கான் பெண்கள் தலீபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் மார்ச் 21-ம் திகதிக்கு பின்னர் மீண்டும் அனைத்து பாடசாலைகளிலும் மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தலீபான்கள் தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.







சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
