முன்னாள் படை வீரர்களை கொன்று குவிக்கும் தலிபான்கள்! எச்சரிக்கை விடுத்துள்ள உலக நாடுகள்
ஆப்கானிஸ்தானின் முன்னாள் படை வீரர்களை குறிவைத்து கொல்வதை நிறுத்துமாறு தலிபான்களை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் கண்டித்துள்ளன.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலிபான்களின் அதிகாரம் கொடி கட்டிப்பறக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி முதல் அக்டோபர் 31 ம் திகதி வரை தங்களிடம் சரணடைந்த ஆப்கான் முன்னாள் படையினர் 47 பேரை தலிபான்கள் கொன்றுள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் கண்டித்துள்ளதுடன், 22 நாடுகள் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. அதில் தலிபான்கள் அரசு, முந்தைய அரசுக்கோ அல்லது அதன் பாதுகாப்பு படை வீரர்களுக்கோ தீங்கு விளைவிக்கக்கூடாது என்ற உறுதிமொழியை தலிபான்கள் அரசு நிர்வாகம் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டறிக்கையில் அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் 19 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan