தாலிபான்கள் கொலை செய்த அரச அதிகாரிகளின் எண்ணிக்கை தொியுமா?
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட அரச அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் எண்டனியோ குட்டரெஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆட்சிக்கு வந்த தலீபான்கள் அதற்கு முந்தைய அரசாங்கத்தின் கீழ் பணியாற்றிய 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை கொலை செய்துள்ளனர்.
அதில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பலர் அடங்குவார்கள் என்று குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற கொலைகளில் மூன்றில் 2 பங்கு கொலைகள் தலீபான்களால் சட்ட விரோதமாக நிகழ்த்தப்பட்ட கொலைகள் ஆகும் என்றும் என்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தலிபான்கள் பெண்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் சர்வதேச ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பி்டத்தக்கது.
கடந்த வருடத்தில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமரிக்க படையினர், அங்கிருந்து வெளியேறினர்.
இதன்போது அமரிக்க படையினருடன் இணைந்து செயற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் பலரும் நாட்டில் இருந்து வெளியேறினர்.



