2026 வரவு - செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சுக்கே அதிக நிதி
தேசிய மக்கள் சக்தி அரசின், 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், உச்சபட்சமாக நிதி அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட வரைவு நாடாளுமன்றத்தில் பதில் நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவால் சமர்ப்பிக்கப்பட்டது.

விஜயின் கரூர் பரப்புரையில் திடுக்கிடும் தகவல்கள் பல! அமைச்சர் அமித்ஷா அதிரடி!! கலக்கத்தில் தமிழக அரசு
வரவு – செலவுத் திட்டம்
அதில், 2026ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தில் அரசின் ஒட்டுமொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அமைப்பின் படி, 634 பில்லியன் ரூபா நிதி நிதியமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வரவு – செலவுத்திட்டத்தில் ஒரு துறைக்கு அல்லது அமைச்சு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதியாக இது பதிவாகியுள்ளது. நிதி அமைச்சுக்கு அடுத்தபடியாக உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாவும், பொதுநிர்வாக அமைச்சுக்கு 596 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபாவும், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வாசிப்பு
வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது இரண்டாவது வாசிப்பாகக் கருதப்படும்.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறும்.
14ஆம் திகதி மாலை 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும். அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகும். பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி நடைபெறும்.



