தலவாக்கலையில் இருந்து தனிமனிதர் ஒருவர் நடை பவனியாக காலிமுகத்திடலிற்கு பயணம் (Photos)
கொழும்பு - காலிமுகத்திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் தலவாக்கலை நகரிலிருந்து சசிகுமார் என்ற தனி மனிதர் ஒருவர் நடை பவனியாகத் தனது போராட்டத்தை ஆரம்பித்தார்.
இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பித்த இந்த தனிமனித நடைபவனி போராட்டம் இன்னும் மூன்று தினங்களில் காலிமுகத்திடல் போராட்டத்தில் இணையும் என்ற நோக்குடன் அவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
தலவாக்கலை நகர மத்தியில் ஆரம்பித்த இந்த போராட்டத்தில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தற்போதைய உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் மத்தியக் குழு உறுப்பினருமான தாளமுத்து சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து நடைபவனியாக சென்ற அவரை கொட்டகலையில் நகர வர்த்தகர்கள் சார்பில் வர்த்தக சங்கத் தலைவர் புஷ்பா விஷ்வநாதன் கொட்டகலை நகரில் வரவேற்பு செய்தார்.
அவருடன் நகர மக்களும் உடனிருந்தனர். மாலை அணிவித்து, ஆசி வழங்கி அவரின்
போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.






