இன்று ஆரம்பமாகும் தலைமன்னார் - கொழும்பு தொடருந்து சேவை
தலைமன்னார் தொடருந்து பாதையில் தொடருந்து சேவைகள் இன்று ஆரம்பிக்கப்படும் என தொடருந்து பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இண்டிபோலகே ( M.J. Indipolage) தெரிவித்துள்ளார்.
இதுவரை, மாஹோ மற்றும் அநுராதபுரம் தொடருந்து பாதைகளுக்கு இடையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டம் காரணமாக, தலைமன்னார் தொடருந்து பாதையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நேர அட்டவணை
அவரது அறிவிப்பின்படி, நாளை கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கி தொடருந்து பயணிக்கவுள்ளது.
இதன்படி தொடருந்து எண் 5003, கொழும்பு கோட்டையிலிருந்து மாலை 4:15 மணிக்கு புறப்படும். மற்றும் இரவு 10:15 மணிக்கு தலைமன்னார் சென்றடையும்.
இதேநேரம் தொடருந்து இலக்கம் 5004, நாளை 13ஆம் திகதியன்று, தலைமன்னாரிலிருந்து அதிகாலை 4:15 மணிக்குப் புறப்பட்டு, முற்பகல் 10:15 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
