கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்
கொழும்பில் பெண் உட்பட ஆறு சந்தேக நபர்களை பம்பலபிட்டி பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உடல் பிடிப்பு செய்வதாக தம்பதியினால் அழைக்கப்பட்ட நபர் ஒருவரிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நபர் ஒருவருக்கு உடல்பிடிப்பு செய்வதாக கூறி அழைத்து வந்து தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி 10 இலட்சம் ரூபாவை ஒன்லைன் மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அதனையடுத்து அவரது பணப்பையில் இருந்த 15,000 ரூபாவும் பறிக்கப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் கைது
முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடையவர் எனவும் பெண் சந்தேகநபர் 54 வயதான பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட மேலும் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri