அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு
நுவரெலியா (Nuwara eliya) ஸ்கிராப் தோட்டத்தில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை (27) உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸ் விசாரணை
பாட்டியின் முழுமையான அரவணைப்பில் வாழ்ந்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி கடந்த (25) ஆம் திகதி பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் பாட்டி பயன்படுத்தி வந்த இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு மயக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தாய் சிறு வயதில் உயிரிழந்த நிலையில் தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து நானுஓயா பிரதேசத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
எனினும் சிறுமி உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் தந்தையை தேடி பிரேத பரிசோதனையின் பின் சடலம் நேற்று (29) தந்தையிடம் ஒப்படைக்கப்படுள்ளது.

மேலும் உயிரிழந்த சிறுமி இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை தானாகவே அதிக அளவில் உட்கொண்டாரா ? அல்லது வேறு யாரேனும் அவருக்குத் தெரியாமலேயே அதிக அளவில் மாத்திரைகளை கொடுத்தனரா ? என்ற பல கோணத்தில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan