மே தினத்தன்று கல்முனை மாநகர பொதுச் சந்தை பூட்டு
அம்பாறை - கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்கள் மே தினத்தன்று முற்று முழுவதுமாக மூடப்படும் என கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே 1 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுக்கான விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் இதுவரை காலமாக கல்முனை பொதுச் சந்தையின் ஊழியர்களுக்கான விடுமுறை வழங்கப்படவில்லை என வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்களின் கோரிக்கை
இதன் காரணமாக கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் ஊழியர்களின் மேலான கோரிக்கையை கவனத்தில் கொண்டு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.
கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் மே 01ஆம் திகதி பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களை முற்று முழுவதுமாக எதுவித வியாபார நடவடிக்கைகளுமின்றி மூடுவதாக அறிவித்துள்ளது.

ஆகவே பொதுச் சந்தையிலுள்ள சகல வர்த்தக நிலைய உரிமையாளர்களும் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி தொழிலாளர்களுக்கான இத் தினத்தில் இந்த கட்டாய ஓய்வினை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri