ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை சர்வதேசத்திடம் கொண்டு செல்லுங்கள்: அமைச்சர்கள் கோரிக்கை- செய்திகளின் தொகுப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு சர்வதேச விசாரணையை நடத்துமாறு சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழு விசேட நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தில் இணைந்ததாகத் தெரிவித்த அமைச்சர்கள், அதில் ஆறு நிபந்தனைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேசத்திடம் குற்றவாளிகளை முன்னிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
"தேவனுடைய ஆலயத்தை இடிப்பவன் தேவனால் அழிக்கப்படுவான், ஏனென்றால் தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது, நீயே அந்த ஆலயம்." நெருக்கடியை உருவாக்கி அதில் இருந்து அதிகாரம் பெற்ற எவராலும் அந்த அதிகாரத்தை தக்கவைக்க முடியாது என்பதை இயற்கை கூட நிரூபித்துள்ளது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு

கோட்டாபயவிற்கு தொடர்பு உண்டு என பல வருடங்களாக கருதினேன்: சனல் 4 காணொளி தொடர்பில் அகிம்சா வெளியிட்டுள்ள நம்பிக்கை

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
