அரசாங்கம் உடன் நிவாரணத்தினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - இரா. துரைரெத்தினம்
அரசாங்கத்தால் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தும், சமுர்த்தி பெறத் தகுதியுடைய ஏழைக் குடும்பங்களுக்கு இதுவரை நிவாரண உதவி வழங்கப்படவில்லை, இதனால் நிவாரணம் வழங்கும் உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்படுகின்றது.
எனவே இவர்களுக்கு அரசாங்கம் உடன் நிவாரணத்தினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவான குடும்பங்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளமுடியாத நிலைகூட ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே நிவாரணங்கள் பெற்றுள்ள நிலையில் ஏனைய தரப்பினர் அதிகாரிகளை சந்தேகம் கொண்டு பார்க்கும் நிலையுருவாகியுள்ளது.
 இரு
தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும் நிலை காணப்படுகின்றது.
கோவிடினால் ஏற்பட்டுள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும்
நிவாரணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு வழங்கப்படாமல் பல
முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        