வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்!
வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாடுகளின் ராஜதந்திரிகளை அழைத்து மாநாடு நடாத்தப்பட வேண்டுமென அவர் பரிந்துரை செய்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவ்வாறு பரிந்துரை செய்துள்ளார்.
வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வெளிநாடுகளிலிருந்து நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலமை ஓர் நெருக்கடி நிலைமையாக பிரகடனம் செய்யப்பட வேண்டுமெனவும், மக்களுக்கு உண்மை நிலையை அம்பலப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணம் அச்சிடுவதனை வரையறுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருட்களை இறக்குமதி செய்யும் போது முன்னுரிமை அடிப்படையில் மட்டும் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.