தாதியர்களின் பதவி உயர்வுக்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுனர் பணிப்பு!
வட மாகாணத்தில் சிரேஷ்ட தர தாதியர்களின் முறையான பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja) பணிப்புரை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
வடக்கு மாகாண சபையினால் உரிய காலப்பகுதியில் தாதியர்களின் தர அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அவர்களின் பதவி உயர்வு வழங்காத சந்தர்ப்பங்களில் திறமையற்ற நிர்வாகம் வடக்கில் இடம்பெறுகின்ற மாதிரியை ஏற்படுத்திவிடும்.
பொதுச்சேவை ஆணைக்குழு வாரத்தில் ஒருமுறை கூடி தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற வேண்டும்.
பொதுச்சேவை ஆணைக்குழு வழங்கப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நான்கு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாது மாதத்தில் ஒரு முறை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று மதிப்பீடுகளையும், பிரச்சனைக்கான தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும்.
மேலும் தாதியர்கள் பதவி உயர்வு தொடர்பில் விரைவாக செயற்பாட்டு நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.