பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்த நாடு
பெரும்பான்மையினராக இஸ்லாமியர்கள் வசிக்கும் மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான்(Tajikistan) நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு சட்டமூலங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் அளித்ததுள்ளது.
இந்நிலையில், தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
புதிய சட்டங்கள்
இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கும் மத தலைவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தஜிகிஸ்தான் அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சகம் இஸ்லாமிய உடை மற்றும் மேற்கத்திய பாணி மினி ஸ்கர்ட் இரண்டையும் மாணவர்களுக்கு தடை செய்தபோது ஹிஜாப் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
1991 ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த போது தஜிகிஸ்தான் நாடு உருவானது.
சுமார் 10 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தஜிகிஸ்தானில், 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில் கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உட்பட பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா



