தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் மாபெரும் கண்டனப் போராட்டம்
கடந்த டிசம்பர் 21ம் திகதியன்று இடம்பெற்ற தையிட்டி போராட்டத்தின் போது தவதிரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது பிரித்தானியா பிரதமர் அலுவலகத்தின் முன்பாக இன்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தாயகத்தில் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டத்தில் கடந்த டிசம்பர் 21ம் திகதி அன்று மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதனை கண்டித்தும் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரியும் தாயகத்தில் இன்று 03.01.2026 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் பிரித்தானியாவில் 2026ம் ஆண்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரின் கையெழுத்துடன் இந்தவிடயம் தொடர்பான மனு ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.



