தமிழர் நில ஆக்கிரமிப்பு! அம்பலப்படுத்திய தேரர்(Video)
தையிட்டி விகாரை தமிழர் நிலங்களை களவெடுத்து கட்டிய விகாரை என நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்தின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,"வடக்கில் முதல் முறை இருந்தவர்கள் தனி தமிழீழ விடுதலை புலிகள் அல்ல. ஈபிடிபி,டெலோ,போன்ற அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து காணப்பட்டது.
அந்த காலப்பகுதியிலேயே பௌத்த விகாரைகள் உடைக்கப்பட்டன. ஆனால் அதை நேரடியாக விடுதலைப் புலிகள் என கூற முடியாது.இதை யார் செய்தார்கள் என புரிந்தே பதிலளிக்க வேண்டும்.
30 வருட போர் காலத்திலும் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் காணப்படவில்லை. தென் இலங்கை வாழ் மக்களுக்கு உண்மை தெரியாது.
ஒன்றை எமது மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு இராணுவம் இருந்தாலும்,எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் நாம் வாழும் இடத்திலுள்ள மக்கள் நல்லவர்கள் இல்லையெனில் நம்மால் அங்கு வாழ முடியாது.
மேலும், புத்தர் சிங்களம் அல்ல. அவர் ஒரு தமிழர். அவர் இந்து முறைப்படியே வாழ்ந்தவர். ஆனால் தற்போது அனைவரும் சிங்கள பௌத்தம் என தெரிவிக்கின்றனர். அது தவறானது." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
