சீனாவின் அழுத்தத்தால் தாய்வான் பிரதிநிதிகள் நாடு கடத்தல்
கென்யாவின் மொம்பாசா நகரில் நடைபெறும் உலகப் பெருங்கடல்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தாய்வான் நாட்டு அறிஞர்கள் இருவரை, கென்ய அரசு எல்லையிலேயே தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக நாடு கடத்தியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் அரசியல் அழுத்தம் காரணமாகவே கென்யா இந்த அநாகரிகமான செயலைச் செய்துள்ளதாக தைவான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பெருங்கடல் விவகாரங்கள் கவுன்சில் ஆகியவை கூட்டாகக் குற்றம் சாட்டியுள்ளன.
தாய்வான் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்கள்
தாய்வானைச் சேர்ந்த அந்தப் பிரதிநிதிகள் கென்ய குடிவரவு அதிகாரிகளால் விசா இரத்து செய்யப்பட்டு, சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டதோடு, அவர்களின் கடவுச் சீட்டு மற்றும் கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மனித உரிமைகளை மீறும் இந்த "காட்டுமிராண்டித்தனமான தடையை" தாய்வான் கடுமையாகக் கண்டித்துள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள கென்ய வெளியுறவுத்துறை, தங்களது வெளியுறவுக் கொள்கை "ஒரே சீனா" கொள்கையை மட்டுமே அங்கீகரிப்பதாகக் கூறி தங்களின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளது.
தாய்வான் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாதவர்களாகவே கருதப்படுவர் என்பதால், தங்களின் எல்லைக்குள் அனுமதிக்க முடியாது என்றும் கென்யா தெளிவுபடுத்தியுள்ளது.
ஆபிரிக்காவில் முதல்முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில், காலநிலை மாற்றம் மற்றும் கடல்சார் பாதுகாப்புக் குறித்து விவாதிக்க இருந்த வேளையில், இந்த அரசியல் தலையீடு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தாய்வான் தரப்பு கவலை தெரிவித்துள்ளது.
குற்றமற்றவர் என்றால் கைதைத் தடுத்து நீதிமன்றம் ஓட வேண்டிய அவசியம் ஏன்! கோட்டாபய விவகாரத்தில் ஆளும் கட்சி கேள்வி
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam