நாடளாவிய ரீதியில் தைப்பொங்கல் கொண்டாட்டம்
உழவர்த்திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் சிறப்பான பூஜைகள் இன்று இடம்பெற்றுள்ளன.
இதற்கமைய தமிழர் திருநாள் "தைப்பொங்கல் " நிகழ்வுகள் இன்று (15.01.2023)தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் தமிழர் தாயக பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
மக்களின் வீடுகள், வியாபார இஸ்தாபனங்கள், தொழில் நிலையங்கள் ஆலயங்களிலில் மிக சிறப்பாக தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.
அந்த வகையில் வரலாற்று சிறப்பு மிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்திலும் சிறப்பாக பூஜைகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைதிருநாள் பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதேவேளை கந்தளாயில் தைத் திருநாளை முன்னிட்டு கந்தளாய் மக்கள் தங்களது வீடுகளிலும் மற்றும் சோழீஸ்வர சிவன் கோவில் தேவஸ்தானத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
சிவன் கோவிஸ் பாலசிங்கம் குடும்பத்தின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிலையில் புத்தளம் மாவட்டத்திலும் இந்து மக்கள் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
வீடுகளிலும், ஆலயங்களிலும் இன்று தைப்பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு அனுஸ்டானங்களை பெற்றுச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேசியப் பொங்கல் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்திலும் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பொங்கல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியா நகரில் உள்ள இலங்கை திருச்சபையில் தைப்பொங்கல் நிகழ்வும் விசேட வழிபாடும் நேற்று (15.01.2023) இடம்பெற்றுள்ளது.
வவுனியா குடியிருப்பு ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தூய ஆவியானவர் ஆலயத்தில் (அங்கிலிக்கன்) உலக தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் உழவர் திருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியதுடன் விசேட வழிபாடும் இடம்பெற்றுள்ளது.
காலை 6மணியளவில் தேவாலயத்தின் பிரதான குருவானவனர் ஜோசுவா சதீஸ் கிறிஸ்பஸ் தலமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் தொடர்ந்து 7.30 மணிக்கு விசேட வழிபாடும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் ஆலயத்தை சேர்ந்த பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து
கொண்டு பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்.
வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் வாழ்த்து செய்தி
பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது என வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் மாதமே தை மாதமாகும்.
தழிழர் நாட்காட்டியில் 10ஆம் மாதமாக கருதப்படுகின்ற தை மாதத்தின் முதல் நாளில் உழவுக்கு உதவிய சூரிய பகவான் பூமித்தாய்க்கு நன்றி தெரிவிப்பதோடு மறுநாள் பசுவிற்கு நன்றி கூறுகின்றோம்.
பாரம்பரிய முறையில் சிலர் இத்திருநாளை நான்கு நாட்களுக்கு கொண்டாடுவார்கள், போகிப் பண்டிகை மார்கழி மாதம் முடிந்து தை மாதம் ஆரம்பித்தலை குறிக்கும். பழையன கழிந்து புதியது புகும் நாளாக கொண்டாடப்படுகின்றது.
எமது சமூகத்தினரிடையேயான கலாச்சார சமூக சீர்கேடுகளிலிருந்து விடுபட, எங்களுடைய இளம் சமூகத்தினரை இவ்வாறான பண்டிகைகளும் மதநம்பிக்கையும் சீர்ப்படுத்தும் என்பது நம்பிக்கை.
ஆகவே பொங்கல் பானை பொங்கி வழிதலைப் போன்று அனைவரினதும் வாழ்விலும் மகிழ்ச்சி
பொங்கி வழிய எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)
நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க Cineulagam
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)