கொழும்பில் வாடகை வீட்டில் தங்கியுள்ளதாக பரவும் தகவல்! மகிந்த வெளியிட்ட விளக்கம்
தனது கிராமத்தை விட்டு வெளியேறி கொழும்புக்கு திரும்பும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மீண்டும் குடியேறியுள்ளதாக பரவும் வதந்தி குறித்து தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புக்கு திரும்புவதாக பரவும் வதந்தி
தனது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி கொழும்புக்கு திரும்பும் எண்ணம் தனக்கு இல்லை. இருப்பினும், தனது தேவைகளை பொறுத்து கொழும்புக்கு செல்ல வேண்டியிருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

மீண்டும் தான் கொழும்புக்குத் திரும்புவதாக பரவும் வதந்தி குறித்து சிலர் விசாரிப்பதாகவும், கொழும்புக்கு திரும்பப்போவதில்லை என்பது மட்டுமே தனது கருத்து என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நாமல் வெளியிட்ட தகவல்
இதேவேளை, மகிந்த ராஜபக்ச நுகேகொடை பகுதியில் தனது நண்பரின் வீட்டில் தங்கியுள்ளதாகவும், அரசாங்கத்திற்கு பயப்படாமல் ராஜபக்ச குடும்பம் யார் என்பதை அறிந்த நண்பர் தங்களுக்கு வீட்டினை வழங்கியதாகவும் நாமல் விளக்கமளித்திருந்தார்.
மகிந்த தற்போது கொழும்புக்கு வந்திருந்தாலும், தங்காலை கார்ல்டன் இல்லத்திலும், கொழும்பில் உள்ள நுகேகொடை இல்லத்திலும் மாறி மாறி தங்குவார் என்றும் நாமல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam