கொழும்பில் வெளிநாட்டு பெண்களுடன் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி! சிக்கிய இளம் பெண்
வெளிநாட்டுப் பெண்களை பயன்படுத்தி ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் நடத்திச்சென்ற சட்டவிரோத விடுதியொன்றை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது குறித்த விடுதியிலிருந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த பத்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு பெண்ணிடம் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய,கொள்ளுப்பிட்டி காலி வீதியில் உள்ள குறித்த இடத்தை சுற்றிவளைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் இருந்த மூன்று வியட்நாம் பெண்கள், ஆறு தாய்லாந்து பெண்கள் மற்றும் ஒரு சீனப் பெண் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் 25 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த விவகாரம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுப்பாடு விதித்த ஐரோப்பா... எரிவாயு ஏற்றுமதியை இந்த நாடுகளுக்கு இருமடங்காக அதிகரித்த ரஷ்யா News Lankasri