பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச கிரிக்கட் பேரவை
உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டபடியே நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் அணியின் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியது.
இந்த முடிவு, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) தனது அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரியதைத் தொடர்ந்து, நிகழ்நிலை மூலம் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை நிர்வாகச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

போட்டிகள் நடைபெறும் இந்தியாவின் அனைத்து மைதானங்களிலும், பங்களாதேஷ் வீரர்கள், ஊடகவியலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், சுயாதீன ஆய்வுகள் உட்பட மேற்கொள்ளப்பட்ட அனைத்து பாதுகாப்பு மதிப்பீடுகளும் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் அட்டவணையில் மாற்றங்கள் செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை எனவும், நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லாத சூழலில் இவ்வாறான மாற்றங்கள் செய்வது, எதிர்கால சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டிகளின் நடுநிலையையும் புனிதத்தையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் நிர்வாக வாரியம் குறிப்பிட்டுள்ளது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri