தொடரை சமப்படுத்தும் முயற்சியில் இந்தியாவிற்கு வெற்றி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு இடம்பெற்றது.
இந்த போட்டியானது இந்தியாவின் நாக்பூர் மைதானத்தில் இடம்பெற்றது.
தாமதமான போட்டி
அதிக மழைவீழ்ச்சி காரணமாக இன்றைய போட்டியானது சற்று தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதுடன்,இன்றைய போட்டிக்கான ஓவர்கள் 8 ஆக குறைக்கப்பட்டன.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 90 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து, 91 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7.2 பந்துகளுக்கு 92 ஓட்டங்களை பெற்று வெற்றி ஈட்டியது.
ஓட்டங்களும் பந்து வீச்சும்
இந்த போட்டியில், இந்தியா அணி சார்பில்,அணி தலைவர் ரோஹித் சர்மா 20 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை தினேஷ் கார்த்திக் 2 பந்துகளுக்கு 10 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை நிர்ணயித்தார்.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ஆடம் ஜம்பா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்நிலையில் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலையை இந்த அணிகள் பெற்றுள்ளன.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
