நடப்பு சம்பியனை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய அவுஸ்திரேலியா
புதிய இணைப்பு
மேற்கிந்திய தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் இடம்பெற்ற விறுவிறுப்பான T20 உலக கிண்ண தொடரின் நேற்றைய ஆட்டத்தில் நடப்பு சன்பியனான இங்கிலாந்தை 36 ஓட்டங்களில் அவுஸ்திரேலியா அணி வெற்றிகொண்டுள்ளது.
அடம் சம்பா மற்றும் பெட் கமிங்ஸ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சானது இங்கிலாந்தின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களை வெளியேற்றியது.
குறித்த போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டேவிட் ஓர்னர், ட்ரேவிஸ் ஹெட் ஆகியோரின் துடுப்பாட்டம் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது.
அவுஸ்திரேலியா அணி
இருவரும் முதலாவது விக்கட்டுக்காக 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்தனர்.
இதன் பின்னர் களமிறங்கிய மிட்சல் மார்ஸ், மெஸ்வேல், ஸ்டோனிஸ் ஆகியோரின் துடுப்பாட்டம் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தி 200 ஓட்டங்களை கடக்க செய்தது.
இதன்படி 20 ஓவர் நிறைவில் 7 விக்கட் இழப்புக்கு 201 ஓட்டங்களை அவுஸ்திரேலியா பெற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்பமானது சிறப்பாக அமைந்திருந்தது.
ஜோஸ் பட்லர், மற்றும் பிலிப் சால்ட் ஆகியோரின் இணைப்பாட்டமானது அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சிக்கலை வழங்கியிருந்தது.
இந்நிலையில், 7ஆவது ஓவரை வீசவந்த எடம் சாம்பா தனது 2ஆவது பந்தில் பிலிப் சால்டை நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழக்க செய்து வெளியேற்றினார்.
இதன் பின்னர் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் எடம் சாம்பாவின் பந்தில் கமிங்ஸ்சிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் வேகமாக ஓட்டங்களை குவிக்க முயற்சித்தபோதும் விக்கட்டுகளை பறிகொடுக்க இங்கிலாந்து அணி 20 ஓவர் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
குறித்த போட்டியின் ஆட்டநாயகனாக எடம் சாம்பா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தொடரின் B பட்டியலில் அவுஸ்திரேலியா அணி 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ரி20 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் முன்னாள் சாம்பியன் அவுஸ்திரேலியா இன்று(08) மோதவுள்ளது.
இன்றிரவு பலபரீட்சை
மேற்கிந்திய தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நடக்கும் இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 10.30 மணியளவில் ஆரம்பமாகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |