டி20 போட்டிக்குள் இந்தியாவிற்கு நுழைய தகுதியில்லை! பாகிஸ்தான் முன்னாள் வீரர்
உலகக் கிண்ண இருபதுக்கு20 தொடரில், இந்திய அணியுடன் இன்று இடம்பெற்ற இரண்டாம் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு இது ஒரு மோசமான தோல்வி என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
Embarrassing loss for India. Bowling badly exposed. No meet up in Melbourne unfortunately. pic.twitter.com/HG6ubq1Oi4
— Shoaib Akhtar (@shoaib100mph) November 10, 2022
இந்திய அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது டுவிட்டர் பதிவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மிகவும் மோசமாக விளையாடிய இந்திய அணி
“இந்தியாவுக்கு இது ஒரு மோசமான தோல்வி. அவர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள். அவர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான தகுதியை இழந்து விட்டார்கள். இந்தியா மோசமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அம்பலமாகிவிட்டது. இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்றாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசுவதற்கு இந்திய அணியில் யாரும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
தோல்விக்கான காரணத்தை விளக்கும் ரோஹித் சர்மா
இந்நிலையில் இன்றைய போட்டி தொடர்பில் இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவிக்கையில்,
இன்று தாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றமளிப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
துடுப்பாட்டத்தில் இறுதியில் போராடி நல்ல ஓட்ட இலக்கைப் பெற்றபோதிலும், பந்துவீச்சு சரியாக அமையவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓர் அணி 16 ஓவர்களில் இந்த இலக்கை எட்டும் அளவுக்கான ஆடுகளம் இதுவல்ல.
இன்று நாங்கள் சரியாகப் பந்துவீசவில்லை. இதுபோன்ற ஆட்டங்களில் நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்வது மிக முக்கியமாகும்.
அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை எவருக்கும் கற்றுத்தர முடியாது. அது தனிநபரைப் பொறுத்த விடயமாகும்.
ஐ.பி.எல் போட்டியில் நெருக்கடியான தருணங்களை நன்கு எதிர்கொள்கிறார்கள்.
பந்துவீச்சில் நல்ல தொடக்கம் அமையவில்லை இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.