அபுதாபியில் டி10 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்
கிரிக்கெட்டின் வேகமான வடிவமான டி10 பதிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பதிப்பில் 12 நாட்கள் உற்சாகமான போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள டி10 போட்டிகளில் 8 அணிகள் 33 ஆட்டங்களில் முதல் பரிசுக்காக போட்டியிடுகின்றன. போட்டிகள் நேற்று (23.11.2022) ஆரம்பமாகியுள்ளன.
அணிகள் தொடர்பிலான தகவல்கள்
இந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அபுதாபி டி10 போட்டிகளின் 6வது பதிப்பில், டுவைன் பிராவோ, அலெக்ஸ் ஹேல்ஸ், சுரேஷ் ரெய்னா, டேவிட் மில்லர், கீரன் பொல்லார்ட் மற்றும் இயான் மோர்கன் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை வீரர்கள்
ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரின் காரணமாக தேசிய அணி வீரர்கள் தவிர்த்து மூன்று இலங்கை வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
சாமிக்க கருணாரத்ன, இசுரு உதான மற்றும் மதீஷ பத்திரன ஆகிய மூன்று இலங்கை வீரர்கள் தற்போது போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
