தமிழர் தாயகத்தில் மகா சிவராத்திரியை தடுக்கிறது இலங்கை அரசு: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்
இலங்கை அரசாங்கமானது, தமிழர் தாயகத்தில் மகா சிவராத்திரி கொண்டாடுவதை தடுக்கின்றமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வவுனியா - நெடுங்கேணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பூசகர் மதியகராசா நேற்றைய தினம் (07.03.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்தே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கண்டனத்தில், தமிழர்களுக்கு தாயகத்தில் வழிபாட்டு, சமய உரிமை உட்பட என எல்லா உரிமையும் தடை செய்ப்பட்டுள்ளமை மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அதேநேரம், மகாசிவராத்திரியை தடுப்பது, தொடரும் கட்டமைப்பு படுகொலையினதும், கலாச்சார படுகொலையினதும் ஒரு அங்கமே ஆகும்.
தொடரும் மனித உரிமை மீறலை ஐ.நா மனித உரிமை ஆணையாளரும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையும் கவனத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
அது மாத்திரமன்றி, கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், மகாசிவராத்திரி
வழிபாடு நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |