அவுஸ்திரேலியாவில் வெள்ள நீரால் மூழ்கியுள்ள சிட்னி -18000 பேர் உடனடியாக வெளியேற்றம்
அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலவும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக நியூசவுத் வேல்ஸ் பகுதியிலிருந்து 18 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் சிட்னி மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் ஆறுகளின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிட்னியில் உள்ள விமான ஓடுதளத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல சவுத் ஈஸ்ட் குயின்ஸ்லாந்து மாகாணத்திலும் வெள்ள நிலைமை மோசமாக உள்ளதுடன், பிரிஸ்பேன் நகரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக 18 ஆயிரம் பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அனைத்து பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.