சிட்னி சுப்பமார்க்கட்டில் இடம்பெற்ற கொடூர சம்பவம் - இணையத்தில் பரவலான காணொளி
அவுஸ்திரேலியா - சிட்னி நகரிலுள்ள அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு குழந்தை உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளியை அந்நாட்டு பெண் பொலிஸ் அதிகாரி எமி ஸ்காட் என்பவர், சம்பவ இடத்தில் பிடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
சமயோசிதமாக செயல்பட்டு பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்திய எமி ஸ்காட்டுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதல்
இந்நிலையில், அங்காடியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த வணிக வளாக கட்டடத்திற்கு நேரடியாக வந்த அவர், வணிக வளாகம் முகப்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்தகொலையாளி ஜோயல் காச்சி (40) மன நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனால் இந்த சம்பவத்தில் எவ்வித பயங்கரவாத தாக்குதலோ, திட்டமிட்ட சதியோ கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |