யாழில் கோவிட் தொற்றால் வெளிநாட்டில் இருந்து வந்த பெண் உயிரிழப்பு
யாழ். மாவட்டத்தில் (Jaffna) நீண்ட காலத்திற்கு பின்னர் கோவிட் தொற்று (COVID 19) காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலை (Jaffna teaching Hospital) பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி (Sathyamurthy) தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் (France) நாட்டில் இருந்து வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கோவிட் உயிரிழப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுர்வேத சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்த 62 வயதான பெண் கோவிட் (COVID 19) கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவர் யாழ். அராலியில் தங்கியிருந்த நிலையில், காய்ச்சல் காரணமாக இரண்டு நாள்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட் தொற்று இருப்பது இன்று (15) உறுதி செய்யப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
