உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் 11 பேர் காயம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் கூலாவடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீதியால் சென்ற வாகனமொன்று மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட முரண்பாடு இவ்வாறு மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் 11 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை காயமடைந்தோரில் வயது முதிர்ந்த பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

