அம்பாறையில் வாள்வெட்டு: 7 பேர் படுகாயம்
அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாள்வெட்டு குழு வீடு ஒன்றினால் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இளைஞர் ஒருவர் மீது தாக்குதலில் மேற்கொண்டதுடன் வீதியால் சென்றவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலிலேயே இவ்வாறு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் தப்பி ஓடியுள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (31) இரவு இடம் பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பழிவாங்கும் நோக்கு
வாச்சிக்குடா பிரதேச இளைஞர் ஒருவருடன் மரணவீடு ஒன்றில் ஏற்பட்ட வாய்தர்கம் காரணமாக பழிவாங்கும் நோக்குடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவதினமான நேற்று இரவு 7.30 மணியளவில் வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த 10ற்கும் மேற்பட்டவர்கள் மோட்டர் சைக்கில்களில் வாள்களுடன் அவரை தேடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் இளைஞன் அங்கு இல்லாததை அடுத்து அந்த பகுதியில் வீதியில் வந்த அரரது நண்பன் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலுக்கு பயந்து தப்பி ஓடி சகோதரியின் வீட்டினுள் புகுந்த நிலையில், அவனை துரத்திச் சென்ற வாள் வெட்டுகுழு சகோதரியின் வீட்டை உடைத்து அந்த இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தடுக்க சென்றவர்கள் மீதும் வாளால் வெட்டி தாக்குதல் நடாத்தியதுன் வீட்டை அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
