ஒட்டுசுட்டானில் வாள்வெட்டு தாக்குதல்: நால்வர் படுகாயம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் குடும்ப உறவினர்கள் இருபகுதியினருக்கு இடையில் நீண்டகாலம் ஏற்பட்ட காணிப்பிணக்கு நேற்று 05.03.2022 இரவு கைகலப்பாக மாறியநிலையில் வாள்வெட்டு தாக்குதலுக்குள்ளாகி நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பத்தினை தொடர்ந்து உடனடியாக விரைந்து செயற்பட்ட ஒட்டுசுட்டான் பொலிஸார் மூன்று பேரைக் கைது செய்துள்ளார்கள்.
பொலிஸாரின் தலையீட்டினால் பாரிய வாள்வெட்டு சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், வாள்வெட்டிற்கு இலக்கான இரு பகுதியினை சேர்ந்த நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதன்போது வயோதிபர் ஒருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றார்கள்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
