கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்: சம்பவ இடத்திலே பலியான இளைஞன்
கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (31.05.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
பூநகரி தம்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் மீது அடையாளம் தெரியாதவர்களால் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞன்
இதன்போது தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 28 வயதுடைய கந்தசாமி பிரணவன் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பிரேதபரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 18 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri