யாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இளைஞரொருவர் வீடொன்றிற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 50 வயதுடைய சுகுமார் என்பவர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பொலிஸார் விசாரணை
பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) எனும் இளைஞன் கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மூன்றாம் குறுக்கு தெருவில் உள்ள சுகுமார் என்பவரின் வீட்டுக்கு வெளியே அதிகாலை வேளை சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் சுகுமாரின் வீட்டினுள் , அத்துமீறி நுழைந்த மூவர் கொண்ட குழு சுகுமார் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உயிரிழந்த இளைஞன் இரவு நேரம் எதற்காக அந்த வீட்டுக்கு அருகில் சென்றார் என்பது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளமை பொலிஸாருக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan