யாழில் வாள்வெட்டு தாக்குதல்(Photos)
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் கிறீன் மெமோரியல் வைத்தியசாலையின் பின்புற வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் வாள்வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடவடிக்கை
நான்கு மோட்டார் சைக்கிள்களில் வருகைதந்த நால்வரடங்கிய வன்முறைக் கும்பலொன்று அத்துமீறி வீட்டினுள் புகுந்து வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஹயஸ் ரக வாகனங்களின் கண்ணாடிகளை வாளால் வெட்டியுள்ளனர்.
மேலும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியதோடு வீட்டின் முன்புற நுழைவாயில் மீதும் வாளால் வெட்டியுள்ளனர்.
இதேவேளை வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதலும் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
பொலிஸ் முறைப்பாடு
இந்நிலையில் வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், வீட்டார் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில்
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.