ஈழத்தமிழர்களின் அரசியல் தொடர்பில் சுவிற்சர்லாந்தின் நடவடிக்கை வேதனையாகவுள்ளது! - நமசிவாயம்
ஈழத்தமிழர்கள் மீதான சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் நடவடிக்கை வேதனையாகவுள்ளது என சுவிற்சர்லாந்தின் லவ்ஸான் மாநிலத்தின் மாநகர சபை தேர்தலில் நான்காவது முறையாகவும் வெற்றிப்பெற்றுள்ள தம்பிப்பிள்ளை நமசிவாயம் தெரிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தின் லவ்ஸான் மாநிலத்தின் மாநகர சபை தேர்தலில் நான்காவது முறையாகவும் வெற்றியிட்டுள்ளமை தொடர்பில் உண்மைகள் நிகழ்வில் கலந்துக்கொண்டு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுவிற்சர்லாந்து மக்களும்,சுவிற்சர்லாந்து அரசாங்கமும் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை சரிவர கலந்துரையாடுவதில்லை.எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் முன்வருவதில்லை .
38 வருட காலமாக தமிழர்கள் இங்கு திறமையின் காரணமாக முன்னேறி காணப்பட்டாலும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் தீர்வினை தருவதில்லை என்பதே உண்மை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 4 மணி நேரம் முன்
6 நாள் முடிவில் வெற்றிநடைபோடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri