சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ் வந்தவருக்கு நேர்ந்த கதி
சுவிட்சர்லாந்தில் (Switzerland) இருந்து யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வந்த ஒருவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
பாலசிங்கம் உதயகுமார் என்ற 55 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சுவிஸில் இருந்து நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள அவரின் தாயார் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் வந்துள்ளார்.
மரண விசாரணைகள்
இந்நிலையில், வீட்டின் குளியலறையில் குளிக்கச் சென்றவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், உடற்கூற்று பரிசோதனைக்காக அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருப்பினும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என திடீர் மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
