தலைமன்னார் - தனுஷ்கோடி இடையில் சாதனை படைத்த இளைஞர்கள்
தலைமன்னாரிலிருந்து (Talaimannar) தனுஷ்கோடி வரை, பாக்குநீரினை கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (Relay race) நீந்தி சாதனை படைத்துள்ளனர்.
தலைமன்னாரிலிருந்து நேற்றைய தினம் காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் நீந்த தொடங்கி 12 பேரும் மாலை 4.40 மணியளவில் தனுஷ்கோடி (Dhanushkodi) அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்துள்ளனர்.
மகாராஸ்ட்ரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை மகராஸ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த நீச்சல் வீராங்கணைகளே இவ்வாறு போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய - இலங்கை அனுமதி
இதன்போது, அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து இலங்கை சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்குநீரினை கடற்பரப்பினை நீந்தி கடந்துள்ளனர்.
மேலும் இராமேஸ்வரம் கடற்றொழில் இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னார் வரை நீந்தியுள்ளனர்.
அதேவேளை, குறித்த போட்டிக்காக இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
