பதவியேற்ற சில மணித்தியாலங்களில் பதவி விலகிய பெண் பிரதமர், மீண்டும் பதவியில்
கடந்த வாரம் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அரசியல் பிரச்சனை காரணமாக தமது பதவியை விட்டு விலகிய சுவீடனின் முதல் பெண் பிரதமர், மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தி்ல் நடைபெற்ற புதிய வாக்கெடுப்பில் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் மக்தலேனா எண்டர்சனை (Magdalena Andersson) நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆதரித்தனர்.
இந்தநிலையில் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தேர்தல் நடக்கும் வரை அவர் ஒரு கட்சி அரசாங்கத்தை வழிநடத்தவுள்ளார்.
கடந்த புதன்கிழமை பிரதமராக பதவியேற்ற அவர், தமது கூட்டணி வீழ்ச்சியடைந்ததை பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
எனினும் இன்று நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் எண்டர்சன் சுவீடனின் முதல் பெண் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாக்கெடுப்பில், 349 உறுப்பினர்களில் 101 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
75 பேர் வாக்களிக்கவில்லை என்றும் 173 வாக்களிப்பின்போது மன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இந்தநிலையில், வாக்கெடுப்புக்குப் பிறகு நடந்த செய்தி சந்திப்பில் உரையாற்றிய மக்தலேனா எண்டர்சன், சுவீடனை முன்னோக்கி கொண்டு செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்தார்.



உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
