நேட்டோவில் இணையப்போவதாக அறிவித்துள்ள ஸ்வீடனும் பின்லாந்தும்!
நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பதாக ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் உறுதி செய்துள்ளன.
இரு நாடுகளும் பல ஆண்டுகளாக எந்த ஒரு அமைப்பிலும் சேராது நடுநிலை வகிக்கின்றன.
இருப்பினும், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து இந்த இரண்டு நாடுகளும் நேட்டோவில் இணைவதற்கான பொது ஆதரவு அதிகரித்துள்ளது.
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு அதாவது நேட்டோ என்பது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட 12 நாடுகளால் 1949 இல் உருவாக்கப்பட்டது.
இது பல ஆண்டுகளாக விரிவடைந்து வந்துள்ளது.
இந்தநிலையில், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இணைந்தால் நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகளில் மொத்த எண்ணிக்கை 32 ஆக உயரும்
இந்த உறுப்பு நாடுகளை பொறுத்தவரை, ஒரு நாடு தாக்குதலுக்கு உள்ளானால் ஏனைய நாடுகள், பாதிக்கப்பட்ட நாட்டுக்கு உதவியளிக்கும்.
நேட்டோ உறுப்பினர் என்ற முறையில் ஸ்வீடன் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என ஸ்வீடன் பிரதமர் மெக்டலினா எண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் ரஷ்ய விரிவாக்கத்தை எதிர்கொள்வதே நேட்டோவின் நோக்கமாக உள்ளது.
எனினும் நேட்டோ அதன் அரசியல் செல்வாக்கு பகுதியில் குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் இருந்து புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் தம்மை ஆக்கிரமிப்பதாகவே ரஷ்யா சந்தேகம் கொள்கிறது. .