சுயாதீனமாக செயற்படுவதால் தமக்கு 6 நிமிடங்கள் குறைப்பு! -சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே!
தாம் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாகவே செயற்படுவதை அடுத்து நாடாளுமன்றில் தமது உரைக்கான காலம் குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே குற்றம் சுமத்தியுள்ளார்;.
இன்று நாடாளுமன்றத்தில் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே உரையாற்ற அழைக்கப்பட்டபோது அவருக்கு நான்கு நிமிடங்கள் தரப்படுவதாக அமர்வுக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் அறிவித்தார்
இதன்போது வாதிட்ட அவர், ஏற்கனவே தமக்கு 10 நிமிடங்கள் தரப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், தாம் சுயாதீனமாக செயற்படும் நிலையிலேயே தமக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்
இதனையடுத்து உரையாற்றிய அவர் நான்கு நிமிடங்களுக்குள் பொதுமக்களின் பிரச்சினையை தெரிவிக்கமுடிந்தமைக்கு மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார்
பொதுமக்கள் பிரச்சினைகள் தொடர்பில் தாம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில்; ஆர்ப்பாட்டம் மேற்கொள்பவர்கள் வன்முறைகளுக்கு செல்லாமல் தமது கோரிக்கைகளுக்காக போராடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
