மேல் மாகாண இடைநிறுத்தப்பட்ட தவணை பரீட்சைகள் தொடர்பில் தகவல்
மேல் மாகாண பாடசாலைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் இன்று ஆரம்பமாக உள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 10 ஆம் மற்றும் 11 ஆம் தரப் பரீட்சைகள் இன்று (06.3.2024) முதல் மீண்டும் நடைபெறுகின்றன.
சமூக வலைதளங்களில் கசிவு
பரீட்சைக்கு முன்னதாக அறிவியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எனவே தவணைப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
