காவல்துறை உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தம்
காவல்துறை உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வடக்கு - கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் காவல்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்படவிருந்தனர்.
எனினும், நாட்டில் நிலவி வரும் கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமை காரணமாக இடமாற்ற உத்தரவுகள் இடைநிறுத்தப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இடமாற்ற உத்தரவுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதியின் பின்னர் அமுலாகும் என அறிவித்துள்ளார்.
காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இடமாற்ற உத்தரவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam